”தகுதிமிக்க இவர்களை தலைவராக்குங்கள்”; கமல்ஹாசன் கோரிக்கை! – வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வியாழன், 20 ஜனவரி 2022 (10:21 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் முன்னதாக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது இரண்டாவது கட்டமாக சென்னை, ஆவடி, போடி, மதுரை மாநகராட்சி ஆகியவற்றில் போட்டியிட உள்ள மநீம வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன். தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்