அந்த பெயரை கூறக் கூட டிடிவி தினகரனுக்கு தகுதியில்லை: கே.பி.முனுசாமி பொளேர்!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (12:25 IST)
சசிகலா, தினகரன் குடும்பத்தை குறி வைத்து நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் தான் ஒன்றும் காந்தியின் பேரன் இல்லை என கூறினார். இதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வியாழக்கிழமை காலையில் தொடங்கிய சோதனை இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
 
இந்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி அளித்துள்ள பேட்டியில், சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சசிகலா குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். மேலும் காந்தியின் பேரன் இல்லை என்று மட்டும் அல்ல, காந்தி என்ற பெயரைக் கூறக் கூட டிடிவி தினகரனுக்கு தகுதியில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்