கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (12:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்த நிலையில் அதுகுறித்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி இடம் தனிப்படை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விசாரணை செய்த நிலையில் தற்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மீண்டும் ஆறுக்குட்டியுடன் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆறுகுட்டி மற்றும் அவரது மகனிடம் விசாரணை பெற்ற போது கிடைத்த தகவலின் அடிப்படையில் கூடுதல் விசாரணைக்காக ஆறுகுட்டி இடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
 
அதிமுக தற்போது கிட்டத்தட்ட இரண்டாக பிளவுபட்டு இருக்கும் நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சூடு பிடித்துள்ளது உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்