திருநங்கையின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கேட்டரிங் தொழிலுக்கான சமயலறை உபகரணங்கள்!

J.Durai

புதன், 26 ஜூன் 2024 (22:41 IST)
சமூக சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் தேஜஸ் இன்னர் வீல் கிளப் என்பது, ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்டம் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் திருநங்கைகளுக்கான வாழ்வாரத்தை மேம்படுத்தும் விதமாக,  அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் இன்னர் வீல் கிளப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. 
 
கோயம்புத்தூர் தேஜஸ் இன்னர்வீல் கிளப் தலைவர் நாசியா ரஹ்மான் மற்றும் செயலாளர் சிரிஷா பிரவீன் குமார், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் அனிதா நஞ்சையா மற்றும் வரவிருக்கும் மாவட்ட தலைவர் ஜாக்ருதி அஸ்வின்,மாவட்ட ESO  PDC அனிதா ஸ்ரீனிவாஸ், ஆகியோர் கலந்து கொண்டு பொள்ளாச்சியை சேர்ந்த திருநங்கை பிரேமா என்பவருக்கு கேட்டரிங் தொழிலுக்கான சமையலறை உபகரணங்களை வழங்கி அசத்தினர்.
 
இந்த  நிகழ்வில் திருநங்கைகளின் உரிமை ஆர்வலர் சஹோதரி அறக்கட்டளையின் நிறுவனர் கல்கி சுப்ரமணியம் அவர்களின் சேவையை பாராட்டி சங்கத்தின் முன்னாள் தலைவர் கீதா பத்மநாபன்  விருது வழங்கி கவுரவித்தார்,இந்த நிகழ்வில் கோயம்பத்தூர் தேஜஸ்  இன்னர்வீல்  கிளப்பின் நிர்வாகிகள் ,மற்றும்  உறுப்பினர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்