கர்ப்பப்பைக்கு பதிலாக சிறுநீர் பையை அகற்றிய மருத்துவர்கள் : பெண்ணின் நிலை கவலைக்கிடம்

வெள்ளி, 3 ஜூன் 2016 (14:10 IST)
கர்பப்பை பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் தவறுதலாக சிறுநீர் பையை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.


 

 
சென்னை எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவரின் மனைவி சித்ரா(45). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சித்ராவிற்கு கடந்த சில வருடமாக வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது.
 
இதையடுத்து திருப்போரூரை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மே மாதம்  சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார் சித்ரா. அப்போது அவரது கர்பப்பையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
எனவே சித்ராவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆனால் சில நாள் கழித்து மீண்டும் சித்ராவிற்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால் வலி நிற்கவில்லை.
 
இதனால், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சித்ரா அனுமதிக்கப்பட்டார். அங்கு சித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரனம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது கர்ப்பப்பைக்கு பதிலாக சிறுநீரகப் பை அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
 
இதைக் கேட்ட அதிர்ச்சியைடந்த சித்ரா குடும்பத்தினர், சென்ற ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு இதுபற்றி கூறியுள்ளனர். எனவே சித்ராவிற்கு மீண்டும் அங்கு, தொடச்சியாக மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஆனால், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்