கர்நாடகாவில் மேலும் 2,738 பேருக்கு கொரோனா'! முழுவிபரம்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (20:24 IST)
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,581 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கர்நாடகாவில் 73 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால், மொத்த இறப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 449 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இன்று தொடர்ந்து 4வது நாளாக 400க்கும் அதிகமானோர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் கேரளாவில் மொத்த பலி எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் கேரளாவில் 8322 மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை  4258 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்