கீழடியில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு..

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (11:39 IST)
சமீபத்தில் கீழடி அகழ்வாய்வில் பழங்கால தமிழர் நாகரீகத்தின் தொன்மையான பல பொருட்கள் கிடைத்த நிலையில் தற்போது வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹராப்பா, மொகஞ்சாதாரோ ஆகிய நாகரீகங்களின் தொடர்ச்சியாக கீழடி நாகரீகம் பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி ஆகியவை கிடைத்தன. இந்நிலையில் தற்போது வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டு ஒன்றோடொன்று பொறுத்தப்பட்ட குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழாய்கள் 60 செ.மீ. நீளமும், வாய்ப்பகுதி 20 செ.மீ.விட்டமும் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வடிகால் அமைப்புகள் நகர நாகரீகத்தில் சான்றுகளாகவும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்