மீட்பு பணிக்கு பின்னர் டெல்லி நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயில் இயக்கப்பட்டதாகவும் சீரமைக்கப்பட்ட வழித்தடம் வழியாக 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள வழித்தடம் இன்று காலைக்குள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி விடும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
முன்னதாக சென்னையில் இருந்து புறப்பட்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் சென்றுக் கொண்டிருந்த போது சிக்னல் கோளாறால் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.