திருவள்ளுவரின் அடையாளத்தை ஏன் மாற்றுகிறீர்? கனிமொழிக்கு கஸ்தூரி கேள்வி..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (09:40 IST)
திருவள்ளுவரின் அடையாளத்தை ஏன் மாற்றுகிறீர்? என திமுக எம்பி கனிமொழிக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டரில் ‘ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.  தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை!
 
நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும்’ என்று பதிவு செய்திருந்தார்.
 
கனிமொழி எம்பியின் இந்த பதிவுக்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது: தமிழரின் அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் அழிப்பதே மறக்கடிப்பதே திராவிடீய கொள்கை என்னும்போது.... ஆளுநர் ரவியோடு என்ன வேணாலும் சண்டை போட்டுக்குங்க. அதுக்காக திருவள்ளுவரின் அடையாளத்தை ஏன் மாற்றுகிறீர். திருக்குறளே அறம் பொருள் இன்பம் (வீடு) என்ற சனாதன தர்ம சிந்தனை நூல்தானே.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்