ஓபிஎஸ் அணியை புறக்கணிக்கும் விஜயபாஸ்கர் - வீடியோ

வெள்ளி, 24 நவம்பர் 2017 (13:02 IST)
கரூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கரூர் திருமாநிலையூர் பகுதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 


 
அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பி.எஸ் அணியினர் மற்றும் ஒ.பி.எஸ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதோடு, ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும், ஒ.பி.எஸ் அணியினரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழைக்காமல் இருப்பது வாடிக்கையாகியுள்ளது.
 
இந்நிலையில் அ.தி.மு.க கரூர் மாவட்ட அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இ.பி.எஸ் படங்கள் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட, பரிசுகள் மற்றும் கோப்பைகளில் பொறிக்கப்பட்டிருந்ததாகவும், ஒ.பி.எஸ் படங்கள் இல்லாததை சுட்டிக்காட்டிய முன்னாள் எம்.எல்.ஏ க்கள் வடிவேலு, காமராஜ் ஆகியோர் கட்சி அலுவலகத்திற்குள்ளேயே சப்தம் எழுப்பியவாறு வந்துள்ளனர். 
 
இந்நிலையில் தொடர்ந்து ஒ.பி.எஸ் அணியினர் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியதையடுத்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர் மதியம் வெடி வைத்தும், இனிப்புகள் வழங்கியும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்திரவையடுத்து, கரூர் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் தலைமையில் பேருந்து நிலையத்தில் கொண்டாடினார்கள். 
 
கூட்டம் குறைவாகவும், ஒ.பி.எஸ் அணியை அழைக்காதது ஒரு பக்கம் இருக்க, ஒ.பி.எஸ் அணியை முற்றிலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரங்கட்டியதாக கூறப்படுகின்றது. 
 
இந்நிலையில் ஒ.பி.எஸ் அணியினர் இரவு நேரத்தில் அதாவது 6 மணியளவில், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் வடிவேலும், காமராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தனியாக வந்து வெடி வைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். 

சி.ஆனந்த குமார் - கரூர் செய்தியாளர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்