கரூர்: வரவனை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!

திங்கள், 16 ஜனவரி 2023 (21:42 IST)
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமம் வேப்பங்குடியில், இன்று (16-1-23) ஆம் தேதி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் வரவனை ஊராட்சி மன்றமும் மற்றும் பசுமைக்குடி தன்னார்வை இயக்கமும் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
 
முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர்  திரு மு.கந்தசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
 
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் மருத்துவர் திருமதி K.ரம்யா மற்றும்  மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் திரு ஞானபிரகாஷ் மற்றும் மருத்துவ குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறந்த முறையில்  கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை  அளித்தனர் மற்றும் பசுமைக்குடி  தன்னார்வலர்கள் திரு T . காளிமுத்து, திரு K.கவினேசன், திரு. P.ஆண்டியப்பன் திரு .R.வேல்முருகன், திரு P.சக்திவேல், மற்றும் C. கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 98 நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடைபெற்றது இதில்   கிட்டப்பார்வை குறைபாடுகள் உள்ள 40 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்