கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கரூர் மாநகராட்சி அலுவலகத்தின் வளாகத்தில் முன்பு நடைபெற்றது. இதில் பிளக்ஸ் கலாச்சாரம் வேண்டாம் என்று திமுக தொண்டர்களையும், அதிகாரிகளையும் அறிவுறுத்திய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின், உத்தரவினை மீறும் விதமாக, கரூர் மாநகராட்சி புதிய மண்டபத்தின் வெளியேயும் உள்ளேயும் பிளக்ஸ்கல் அரங்கேறியது. சுமார் 5 க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆகியோர் அடங்கிய மூன்று படங்கள் கொண்ட பிளக்ஸ்கள் தான் ஆங்காங்கே காணப்பட்டதே தவிர, திராவிட ரோல்மாடல் ஆட்சி என்று ஓரிரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கூறியதை, கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் மாநகராட்சி நிர்வாகமும், கரூர் மாவட்ட திமுகவும் மறந்து விட்டது போல உள்ளதாக, திமுகவினர் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் முணுமுணுத்து சென்றனர். இந்நிலையில் அங்கிருந்த ஒரு இளைஞர் பிளக்ஸ் ஐ பார்த்து உதயநிதி புகைப்படம் காணாம் என்று கூற, அதற்கு திராவிடர் கழக நிர்வாகி ஒருவர், தம்பி போங்க, ரோல்மாடல் ஆட்சிக்கு வித்திட்டவர் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தான், அவர்கள் படத்தை வே காணோம், அவர்கள் கொள்கை இனி எங்கே இருக்கப் போகின்றது என்றனர்.