செம்மலுக்கு நன்றி தெரிவித்த வித்யாச மழலைகள்

வியாழன், 3 மார்ச் 2022 (23:43 IST)
வ.உ.சிதம்பரனார் உருவ வேடத்தில் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்த மழலைகள் – மறைந்த சுதந்திர போராட்ட தியாகி மற்றும் செக்குழுத்த செம்மலுக்கு நன்றி தெரிவித்த வித்யாச மழலைகள். 
 
கரூர் பரணி பார்க் கல்விக்குழுமத்திற்கு வந்த செய்தி மக்கள் தொடர்பு துறையின் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்று குறித்த நடமாடும் பேருந்து கண்காட்சி – ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்
 
தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த ஆண்டினை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றினை விளக்க கூடிய புகைப்பட கண்காட்சி தமிழகம் முழுவதும் சென்று வரும் நிலையில், கரூர் மாவட்ட்த்திற்கு ஒரிரு தினங்களுக்கு முன்னர் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. இந்நிலையில், இன்று கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்திற்கு வந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கரூர் பரணிபார்க் பள்ளி குழுமங்களின் தளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்வாவதி, முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பள்ளியின் வளாகத்திற்கு வந்த பேருந்தினை, பரணி பார்க் பள்ளி குழுமங்களின், பரணி வித்யாலா மாணவ, மாணவிகளும், பரணி பார்க் பள்ளியின் மாணவ, மாணவிகளும், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் என்று ஏராளமானோர் கண்டு களித்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட நிர்வாகம், கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை, கரூர் பரணி பார்க் பள்ளி குழுமங்கள் சிறப்பாக செய்திருந்தது. முன்னதாக செக்குழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் உருவ வேடம் போல் மாணவ, மாணவிகள் தங்களது ஆடைகளை அணிந்து அவரது சொகுசு பேருந்திற்குள் இருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, அந்த பேருந்திற்கு முன்னர் வரிசையாக நின்று ஏராளமான வ.உ.சிதம்பரனார் வேடம் அணிந்த மழலைகள் குரூப் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்