சவால் விட்ட ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:22 IST)
ராயபுரத்தில் என்னை எதிர்த்து முகஸ்டாலின் போட்டியிட தயாரா என சவால் விட்ட ஜெயக்குமாருக்கு திமுக பிரமுகர் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் பெரிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் மற்றும் குஷ்பு ஏற்கனவே கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து முக ஸ்டாலின் போட்டியிட தயாரா என சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டிருந்தார். இந்த சவாலை தற்போது ஏற்றுக்கொண்டுள்ள ஆர்எஸ் பாரதி, ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு எதிராக திமுக வலுவான ஒரு போட்டியாளரை நிறுத்தும் என்றும் இதனை அடுத்து அந்த தொகுதியில் ஜெயக்குமார் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
ஜெயகுமார் மட்டுமின்றி தமிழக அமைச்சர்கள் அத்தனை பேருக்கும் எதிராகவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலுவான வேட்பாளரை நிறுத்தும் என்றும் இந்த முறை ஒரு அமைச்சரை கூட வெற்றி பெற விடமாட்டோம் என்றும் திமுக தரப்பினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்