மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதியின் நகைச்சுவை உணர்வு: துரைமுருகன்

வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (11:56 IST)
கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். இவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நல முடியாமல் இயற்கை எய்தினார். இதனால், தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஆனால், கருணாநிதிக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வு பலரும் அறிந்தது தான், அப்படி ஒரு விஷயத்தை தான் துரைமுருகன் அவர்கள்  கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமைகளை கொண்டவர் கலைஞர்  கருணாநிதி. இப்படி தான் தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் உச்சத்தைத்தொட்டு யாராலும் எட்ட முடியாத அளவுக்கு சாதனைகளைப் படத்தவர் கருணாநிதி.
 
கருணாநிதி உடல்நலக் கோளாறால் ஒரு தருணத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்களாம். அப்போது டாக்டர் வந்து சோதித்து பார்க்கும்போது ‘மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க’ (கருணாநிதி மூச்சை இழுத்துப் புடிக்கிறார்) ‘இப்போ மூச்சை விடுங்க’என்றார். மேலும் நான் சொல்லும் போது மூச்சை  விடுங்கள் என சொல்ல, உடனே கலைஞர் ‘அதை விடக்கூடாது என்பதற்காக தானே இங்கு வந்துள்ளேன்’ என்ற கருணாநிதியின் பதிலைக் கேட்டு மருத்துவர்  வியந்துபோனாராம்
 
இவ்வாறு சாதுர்யமாகவும், துரிதமாகவும், சமயோசிதமாகவும், அறிவுபூர்வமாகவும் பதிலளிக்க ஒருவராலும் முடியாது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது,  பத்திரிகையாளர் கேட்கும் குதர்க்கமான கேள்விகளுக்கு கூட அவரது கேள்வியிலேயே பதில் இருப்பதாக சொல்லி மடக்கி விடுவார். எந்த கேள்விகளையும் அவர்  எதிர்கொண்டு தனக்கே உரித்த சாதுர்யமான பாணியில் விடையளிப்பார் கருணாநிதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்