கருணாநிதி ஒரு புண்ணிய ஆத்மா என கூறும் ஜோதிடர்கள்

புதன், 8 ஆகஸ்ட் 2018 (13:05 IST)
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். ஏகாதசி நாளில் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி ஒரு புண்ணிய ஆத்மா என்றும் சொர்க்கம் புகுவார் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக நேற்று இயற்கை எய்தினார். ஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதி ஒரு புண்ணிய ஆத்மா என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய  துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன.
 
இந்த ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் மார்கழி வளர் பிறையில்  11வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர். ஏகாதசி நாளில் விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் சொர்க்கம் வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 
95 ஆண்டுகள் வாழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி, மகாவிஷ்ணுவின் அடியவரான ஸ்ரீராமானுஜரின் வரலாறு காவியத்திற்கு வசனம் எழுதியவர். மரணத்திற்கு பிறகு சொர்க்கம், நரகம் என்பதில் எல்லாம் தலைவர் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஆடி மாதம் யோகினி ஏகாதசி  திதியில் கருணாநிதியின் மரணம் நிகழ்ந்தது புண்ணியம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்