இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அரசு சார்பாக சட்டமன்ற வளாகத்தில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதன்பின் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படம் வைத்து மலர் மாலை அணிவித்தனர்.