கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரியில் குவிந்த பிரமுகர்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (19:37 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தி வெளியானதில் இருந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையின் முன் குவிய தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், கி.வீரமணி, முத்தரசன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் வருகை தந்துள்ளனர். ஏற்கனவே கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவேரி மருத்துவமனைக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோர்களும் வருகை தந்துள்ளனர். 
 
இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் போராடி வென்று மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்