திமுகவை விமர்சனம் செய்த கார்த்தி சிதம்பரம்.. விசாரித்து அறிக்கை அனுப்ப காங். தலைமை உத்தரவு..!

Mahendran

வியாழன், 25 ஜூலை 2024 (12:56 IST)
ஆட்சியில் பங்கு, அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சையான விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பொறுப்பாளர் அஜோய் குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு என தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார். மேலும் 2026 தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் தான் என்றும் மக்கள் பிரச்சனையில் ஆளும் கட்சி தவறு செய்தால் அதை தட்டி கேட்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் பேசி இருந்தார். கூட்டணி தர்மம் என்று ஆளும்கட்சி தவறு செய்யும் போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது என்று கார்த்தி சிதம்பரம் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொது மேடைகளில் காங்கிரஸ் மாநிலத் தலைமை மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் பேசியிருந்த நிலையில் தற்போது  இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்