மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனையை தொடங்கினார். இதில் தேனி மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி, அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொகுதிகளில் நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய அளவில், கிளை அளவில் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
திமுக அரசின் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு, மற்றும் வரிகள் உயர்த்தியது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.