காவிரி நீரும் கடவுளின் கருணையும்

செவ்வாய், 17 ஜூலை 2018 (21:38 IST)
காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்று கர்நாடக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியது. தற்போது கர்நாடகத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர வாய்ப்பே இல்லை என்று குறிப்பிட்டிருந்தது
 
காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட் அமைத்தபோதிலும் அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்தது கர்நாடக அரசு. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று வாட்டாள் நாகராஜனின் கன்னட அமைப்புகள் உள்பட ஒருசில அமைப்புகள் போராட்டம் நடத்தின. ரஜினியின் 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் திரையிட பிரச்சனைகள் செய்தன
 
ஆனால் கன்னடர்களின் மனநிலை ஒருவாறு இருக்க கடவுள் தமிழகத்தின் பக்கம்தான் இருக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது. ஒருசொட்டு தண்ணீர் தரமுடியாது என்று கூறிய கர்நாடகாவை வினாடிக்கு ஒருலட்சம் கண அடி தண்ணீரை திறக்க வைக்கும் அளவுக்கு கடவுள் செய்துள்ளார். எனவே காவிரி பிரச்சனையை கடவுளை தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்