காற்றழுத்த தாழ்வுநிலை: 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

சனி, 14 ஜூலை 2018 (17:34 IST)
வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஐந்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேசம், கோவா, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 
 
அதேபோல், தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்