இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார்.
பின்னர் அது குறித்து பிஸ்னஸ்லைன் பத்திரைக்கைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தேன். அவர் விரைவில் குணமடைய எங்களது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.