திமுக உட்கட்சித் தோ்தலில் சிலரை தோ்ந்தெடுக்க வரும் 9 ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ எனக்கு எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்றும் நான் இணையும் அளவிற்கு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தகுதி இல்லை என்றும் கூறினார்.
இதனை அடுத்து அவரது துணை பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று திமுக தலைமை ஆலோசனை செய்து வருகிறது. திமுகவின் விதிகளின்படி துணை பொதுச்செயலாளர் பதவி ஒரு பெண்ணுக்குத்தான் அளிக்க வேண்டும் என்பதால் இந்த பதவி கனிமொழி எம்பி அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது திமுக உட்கட்சித் தோ்தலில் அடுத்த கட்டமாக திமுக தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9 ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி, புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.