இந்த நிலையில் நிதி நெருக்கடி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால் துணைவேந்தர் குமார் ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. தனது ராஜினாமா குறித்து குமார் கூறிய போது உடல்நிலை பாதிப்பு காரணமாக ராஜினாமா செய்ய முடிவு செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன், வேறு எந்த காரணமும் இல்லை, உடல்நல பாதிப்பு காரணமாக பணியில் இருந்து விலகிக் கொள்ள முடிவு எடுத்தேன், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்