போக்குவரத்தை தடை செய்தது போதும்: கமல் அறிக்கை!!

சனி, 29 ஆகஸ்ட் 2020 (11:01 IST)
போக்குவரத்து தடை போதும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனாவை பற்றி மருத்துவ உலகமே குழம்பித்தவித்த காலம் தாண்டி இப்போது மக்களே விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கிவைப்பது பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, வேலைக்கு செல்ல இயலாத அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அபாயக் கட்டத்திற்கு செல்லவே வழி வகுக்கும். 
 
எனவே வரும் ஆகஸ்ட் 31க்குப் பின் ஊரடங்கு தேவைதானா என அரசு பரீசிலிக்க வேண்டும். மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இ பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும். 
 
ஊரடங்கு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது என கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்