களத்தில் இறங்கிய கமல்ஹாசன் - எண்ணூர் துறைமுகப் பகுதியில் திடீர் விசிட்

சனி, 28 அக்டோபர் 2017 (10:26 IST)
அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படு பாழடைந்த எண்ணூர் துறைமுகப் பகுதிகளில் நடிகர் கமல்ஹாசன் இன்று அதிகாலை திடீர் விசிட் அடித்தார்.


 

 
வடசென்னையில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் வல்லுநர் அனல்மின் நிலைய கழிவுகள் கொட்டப்பட்டு வருவது தொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுருந்தார்.
 
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் எண்ணூர் துறைமுகப் பகுதிக்கு வந்தார். அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். அவருடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம உடன் இருந்தார்.
 
கமல்ஹாசன் வெறும் டிவிட்டரில் மட்டும் அரசியல் செய்கிறார். களத்தில் இறங்கி மக்களுக்காக போராட வேண்டும் என தமிழிசை போன்ற அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இன்று அவர் களத்தில் இறங்கி மக்களை சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து அந்த பகுதியில் கழிவுகளைக் கொட்ட மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்