மற்ற கட்சிகள் கொடுத்ததை விட அதிகமாக கொடுப்போம் - கமல்ஹாசன் அதிரடி

ஞாயிறு, 20 மே 2018 (14:31 IST)
அரசியலுக்கு வருவதாய் அறிவித்து, மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

 
சமீபத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார். சென்னையில் நடைபெற்ற அந்த விழாவில், அன்புமணி ராமதாஸ், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
அவர் தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் பேட்டியளித்தார். அப்போது, நாங்கள் சென்ற போது சில கிராமங்களில் எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களை அப்படி பழக்கி வைத்திருக்கிறார்கள். மற்ற கட்சிகள் கொடுத்ததை விட நாங்கள் அதிகமாக கொடுப்போம். ஆனால், அப்பணம் அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பணமாக இருக்கும். ஓட்டுக்கு பணம் வாங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும். இல்லையேல் மாற்றம் சாத்தியமில்லை. 
 
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கடையாக தொடங்கி தற்போது சந்தையாக மாற்றிவிட்டனர். இது மாற வேண்டும். அதற்கு மக்களின் ஆதரவு தேவை. எல்லோரும் சேர்ந்து இதை மாற்றுவோம்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்