இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து 60 ஆயிரம் திருட்டு

வெள்ளி, 19 ஜனவரி 2018 (15:23 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 60 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடர்கள் நூதன முறையில் பொதுமக்களின் பணத்தை திருடி வருகின்றனர்.
 
இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி(30).அவரது மொபைல் போனில் வந்த அழைப்பில், மறுமுனையில் பேசியவர் தான் ஸ்டேட் பேங்கில் இருந்து கூப்பிடுவதாகவும், உங்களின் ஏடிஎம் அட்டை காலாவதி ஆகிவிட்ட காரணத்தால், புது ஏடிஎம் அட்டை வழங்க உங்களது ஏடிஎம் அட்டையின் நம்பரை சொல்லுங்கள் என அந்த போலி வங்கி ஊழியர் கேட்டுள்ளான். இதனை நம்பிய செல்லபாண்டி நம்பரை கூறியுள்ளார். மேலும் உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒரு நம்பர்(OTP) வரும் அதைப் பார்த்து கூறுங்கள் சொல்லியிருக்கிறார். செல்லபாண்டியனும் OTP ஐ கூறியுள்ளார்.
 
அந்த போலி வங்கி ஊழியர் போனை கட் செய்த உடன், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 60000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்லப்பாண்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்