மக்கள் நீதி மய்யம் ரஜினியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்த வாய்ப்பு இருக்கிறது என கமல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழக அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்களாக கட்சியை நடத்தி வருகிறார்.
இருப்பினும் தமிழகத்தில் ரஜினி குறித்த செய்திகள் ஏற்படுத்தும் பரபரப்பின் பாதி அளவு கூட கமல்ஹாசனின் செய்திகள் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமல் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, மக்களவை தேர்தலின்போது, எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, எங்களுக்கு கிடைத்தது வெறும் 18 நாட்கள் மட்டுமே. அந்த நேரத்திற்குள் இவ்வளவு தூரம் ஊடுருவ முடியும் என்பதே, எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை. பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும். ரஜினியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்த வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.