தமிழகத்திற்குள் வந்தது ராமராஜ்ய ரத யாத்திரை: எல்லையில் பதட்டம்

செவ்வாய், 20 மார்ச் 2018 (10:26 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கேரள உள்ப்ட ஒருசில மாநிலங்களை கடந்த சற்றுமுன் தமிழகத்தின் எல்லையான நெல்லை மாவட்டத்தில் உள்ள கோட்டை வாசல் பகுதிக்கு வந்துள்ளது.

ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்பட பல்வேறு கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலை வரை, நெல்லை மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 144 தடையை மீறி போராட்டம் நடந்த சென்ற திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்  வாஞ்சிநாதன் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் ரதயாத்திரைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் கோட்டைவாசலுக்கு வந்த ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வழியாக, இன்று மதியம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சென்று, இரவு மதுரைக்கு செல்லும் இந்த ரத யாத்திரை வரும் 25ஆம் ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை நிறைவு பெறும் வரை தமிழக போலீசார் பாதுகாப்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்