தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் ஆளுனரின் ஆலோசகரை தொடர்பு கொண்ட கமல்
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (19:55 IST)
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலால் 44 பாதுகாப்பு படையினர் பலியான அதிர்ச்சியில் இருந்து நாடே இன்னும் மீண்டு வராத நிலையில் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்றும், ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும் புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு தமிழக சிபிஆர்எஃப் வீரர்களான சுப்பிரமணி மற்றும் சிவச்சந்திரனின் குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.