பயங்கரவாத தாக்குதலில் அதிக வீரர்களை பறிகொடுத்த மாநிலம்...

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (16:13 IST)
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பலியான 41 பேரில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
 
காஷ்மீர் புல்வாமாவில் நேற்று திடீரென்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்ற வீரரும் அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் இத்தாக்குதலில் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
 
இந்த தாக்குதலில் அதிகமான வீரர்களை பறிகொடுத்தது உத்திரபிரதேச மாநிலம் தான். 12 வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த மிருகச்செயலால் இந்தியாவெங்கிலும் அழுகுறல் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் எனவும், அடுத்த சர்ஜிக்கல் அட்டாக்கிற்கு தயாராகிக்கொள்ளுங்கள் எனவும் பாகிஸ்தானிற்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்