சிகரம் தொட்ட வல்லாளர்.. அறிஞர் அண்ணா குறித்து கமல்ஹாசன்

Mahendran

சனி, 3 பிப்ரவரி 2024 (17:49 IST)
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அவருடைய நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் 
 
திமுக அதிமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர் என்பதையும் பார்த்தோம். மேலும் சில தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அண்ணாவின் பெருமை குறித்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
அந்த வகையில் உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அண்ணா குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு. அரசியல், இலக்கியம், சினிமா என, தான் தொட்ட அனைத்திலும் சிகரம் தொட்ட வல்லாளர். கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் மாண்பிற்கும் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தவர்.
 
பேரறிஞரின் நினைவுநாளில், தமிழ்ச் சமூகத்துக்கான அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்