அப்போது அப்துல்கலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத நீங்கள் அவருடைய நினைவிடத்தில் இருந்து ஏன் அரசியல் பயணத்தை தொடங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அது என்னுடைய நம்பிக்கை” என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த பதில் அப்பட்டமான பொய் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்
இயக்குநர் ஆர்.சி. சக்தி , ஆச்சி மனோரமா , நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் நாகேஷ் ஆகியோர்கள் மறைந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய கமல், அவ்ர்களுடைய இறுதி ஊர்வலத்தில் மயானம் வரை சென்றார். உண்மை இப்படியிருக்க கமல் இவ்வாறு கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியலில் நுழைந்த பின் கொடுத்த முதல் பேட்டியிலேயே கமல் ஒரு அரசியல்வாதி என்று நிரூபித்துவிட்டதாகவே கூறப்படுகிறது.