அதிமுகவுக்கு எதிராக கமல் அரசியல் செய்யவில்லை: கருணாஸ் பேட்டி

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (18:00 IST)
கமல்ஹாசன் ஆளும் கட்சிக்கு எதிராக தான் கட்சியை  உருவாக்குகிறார் என்பதில் உடன்பாடு இல்லை என்கிறார் கருணாஸ்.
 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார். 
 
இது குறித்து திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கமல்ஹாசன் பற்றி உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கவே கமல்ஹாசன் கட்சி தொடங்குகிறார், மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக தான் கட்சி தொடங்குகிறார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என கருணாஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்