காகிதப் பூக்கள் மலராது - கமல்ஹாசனை சொல்கிறாரா மு.க.ஸ்டாலின்?

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:47 IST)
காகிதப் பூக்கள் மலராது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். அதுவும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை நாளை கமல்ஹாசன், ராமேஸ்வரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.
 
அதிமுகவிற்கு திமுகதான் மாற்று என்ற கருத்து உலவி வந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அக்கட்சியனரை சற்று அசைத்து பார்த்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “பருவநிலை மாறும் போது சில பூக்கள் மலரும். பின் உதிர்ந்து விடும். திமுக என்ற பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. 
 
திமுக குடும்ப ஆட்சிதான். அதில் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் பலர் உள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாளை காலை கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கவுள்ள நிலையில், காகிதப் புக்கள் மணக்காது என ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்