திருவாரூரில் களமிறங்குகிறாரா கமல்ஹாசன்?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (07:04 IST)
திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையை தொடங்கிவிட்டது. மதிமுக, கம்யூனிஸ்ட் உள்பட ஒருசில கட்சிகள் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டதால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் முதன்முதலாக கட்சி தொடங்கி இடைத்தேர்தலில் தான் போட்டியிட்டார் என்றும், வெற்றி தோல்வி இரண்டாம் பட்சமாக இருந்தாலும் கட்சி ஆரம்பித்தவுடன் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி என்ற பெருமை கிடைக்கும் என்றும் கமல்ஹாசனின் தொண்டர்கள் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ஆளும்கட்சியின் அதிகார செல்வாக்கு, தினகரனின் பண செல்வாக்கு, கருணாநிதி வென்ற தொகுதி என்ற திமுகவின் பலம் ஆகியவற்றை மீறி கமல்ஹாசன் வெற்றி பெற முடியுமா? முதல் தேர்தலிலேயே தோல்வி அடைந்துவிட்டால் அது ஒரு கரும்புள்ளியாக மாறிவிடுமே என்ற எண்ணமும் ஒருசில தொண்டர்களிடம் உள்ளது. கமல்ஹாசன் இதுகுறித்து என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்