கமல்-திமுக திடீர் நெருக்கமா?

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (21:37 IST)
உலகநாயகன் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் கட்டம் கட்ட தொடங்கிவிட்டனர். ஒருவர் கமல் எல்லாம் ஒரு ஆளா என்கிறார். இன்னொருவர் கமலை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கமல் ஒழுங்காக வரி கட்டினாரா? என்று சோதனை செய்யப்படும் என்று ஒருவரும் கூறி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் ஆட்சியாளர்களை இன்னும் தீவிரமாக எதிர்க்க தனக்கு ஒரு துணை வேண்டும் என்று கமல் நினைத்ததாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் திடீரென கமலுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
 
பீகாரை வீட தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அனைத்து துறைகளிலும் இருப்பதாக நடிகர் கமல் கூறியிருந்தார். மக்கள் கருத்தை பிரதிபலித்த நடிகர் கமலஹாசனை அமைச்சர்கள் சட்டத்தை காட்டி மிரட்டு கின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மைகளை திருத்தி கொள்வதே ஜனநாயக ஆட்சி, கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பது விமர்சிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல், நடிகரின் கமலின் கருத்தே தமிழக மக்களின் கருத்தாகும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
கமல் மற்றும் திமுக ஆட்சியாளர்களை எதிர்க்க ஒன்றிணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்