பாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்துவிட்டது – அதிமுக அமைச்சர் கிண்டல்!

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (15:07 IST)
பாஜகவுக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான வி பி துரைசாமி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்று கூறியிருந்தார். இது அவர்கள் கூட்டணியில் இருக்கும் அதிமுகவினரை சீண்டியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.

அதில் ‘திமுகவுக்கு பாஜகவுக்கும்தான் போட்டி என்றால் யார் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பாக அல்ல. யார் இரண்டாவது இடத்துக்கு வருவது என்பது தொடர்பாக. 2011 தேர்தலில் எங்களோடு கூட்டணி அமைத்து தேமுதிக எதிர்க்கட்சியாக வந்தது போல இப்போது எங்கள் கூட்டணியில் இடம்பெற்று பாஜக எதிர்க்கட்சியாக வர ஆசைப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்