தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் மெரினாவில் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மெரீனாவில் கருணாநிதிக்கு அதிமுக போனால் போகட்டும் என்று தான் இடம் கொடுத்தது. அதேபோல் கருணாநிதிக்கு அரசு மரியாதை தந்தது அதிமுக போட்ட பிச்சை என கூறினார்.