ரேசனில் இலவச கபசுர குடிநீர் ! உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், 22 ஜூன் 2021 (21:19 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவி வந்த நிலையில் தற்போது இந்நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்  கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை இலவசமாக விநியோகிக்கக் கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் இரண்டாம் தவணைத்தொகை மற்றும் இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழக அரசிடமிருந்து  விரையில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்