கருப்புப் பூஞ்சை நோய் மருந்து வரியில்லாமல் இறக்குமதி

வியாழன், 27 மே 2021 (13:35 IST)
கருப்புப் பூஞ்சை நோய் மருந்தை வரியில்லாமல் இறக்குமதி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சையில் பயன்படும் ஆம்போடெரிசின் பி என்ற மருந்தை இறக்குமதியாளர்கள் வரியில்லாமல் இறக்குமதி செய்துகொள்ள வாக்குறுதி அடிப்படையில் அனுமதி தந்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அரசு வரிவிலக்கு அளிக்கும் வரை இந்த முறை தொடரும்.
 
உயிர்களைக் காக்க இந்த மருந்து அவசியம் என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், இந்த மருந்து பற்றாக்குறையாக உள்ளவரை இந்த மருந்தின் இறக்குமதிக்கு சுங்க வரியில் இருந்து அரசு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்