மத்திய அரசின் முடிவுக்கு திராவிடர் கழகம் வீரமணி வரவேற்பு!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:37 IST)
பொதுவாக மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அந்த திட்டத்திற்கு திராவிடர் கழகம்  உள்பட திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பெண்ணின் திருமண வயது 21 என்று மத்திய அமைச்சரவை மாற்றம் முடிவு செய்ததற்கு திராவிட கழகம் வரவேற்று உள்ளதோடு மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்ததை பாராட்டுகிறோம் என்றும் வரவேற்கிறோம் என்றும் விரைவாக நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம் என்றும் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தெற்கே தந்தை பெரியார் மற்றும் வடக்கே டாக்டர் அம்பேத்கர் செய்த பிரச்சாரம் காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்