தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு.. சந்துருவின் பதவிக்காலம் நீட்டிப்பு

Mahendran
திங்கள், 1 ஏப்ரல் 2024 (11:46 IST)
தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலியாக, சந்துரு தலைமையில் குழு தமிழக அரசு அமைத்தது. இந்த குழு பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.
 
ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவின் இந்த குழு பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த குழுவின் கால நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து முழு ஆய்வு செய்து வரும் மே 31ஆம் தேதிக்குள் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிட்த்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்