தமிழக அளவில் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மிகவும் வரவேற்கத்தக்க பயனுள்ள திட்டங்களை தீட்டுவதோடு மிகவும் மக்களை கவரும் வகையில் மக்களோடு மக்களாக பல்வேறு புதிய யுக்தியில் தனது பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார். நன்கு படித்த இளைஞர் அதுவும் ஐ.பி.எஸ் படித்து தனது பணியையே ராஜிநாமா செய்து விட்டு தன்னுடைய மாநிலத்திற்கு ஏதாவது ஒரு நலப்பணியை செய்வதற்காக வந்த அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்கள் தற்போது பாஜக மாநில துணை தலைவராகவும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராகவும் போட்டியிடும் பட்சத்தில் தனது சொந்த தொகுதியில் நிற்கும் அண்ணாமலைக்கு ஆங்காங்கே மக்கள் செல்வாக்கு பெருகி வரும் நிலையில், சனிக்கிழமையான இன்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட காருடையாம்பாளையம், கரியாம்பட்டி, குரும்பட்டி, குரும்பட்டி காலனி, அண்ணாநகர், சூரியன்பாளையம், வேலக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பாராமல் திறந்த வேனிலும் ஆங்காங்கே நடந்தே சென்று மக்களோடு மக்களாக வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்நிலையில், அவருக்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் ஆங்காங்கே வெடித்து பாஜக வினரும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு கொடுத்த நிலையில், அந்த பட்டாசுகள் ரோட்டின் ஓரத்தில் இருந்த காய்ந்த புற்கள் மற்றும் காகிதங்களில் தீயானது பற்றி எரிந்தன. இந்நிலையில் இதைக்கண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை, உடனே அருகிருந்த ஒரு குடத்தினை எடுத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இந்த காட்சிகள் மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகியும் வருகின்றது.