எனக்குத் தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதிதான் – கிருஷ்ணசாமி பேச்சுக்கு ஜெயக்குமார் விளக்கம் !

வியாழன், 30 மே 2019 (11:10 IST)
பத்திரிக்கையாளரிடம் எந்த சாதி எனக் கேட்டு சர்ச்சையைக் கிளப்பிய கிருஷ்ணசாமியின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தேர்தல் முடிவுகள் குறித்துப் பேச இரண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. அப்போது பேசிய கிருஷ்ணசாமி அதிமுக மற்றும் பாஜக அரசின் புகழ்களைப்பாடி இவைகளுக்கு தமிழக ஊடகங்கள் நன்றி சொல்ல மறுக்கின்றனர் எனக் கூறினார். மேலும் ஊடகங்கள் செய்த தவறான பிரச்சாரங்களால்தான் பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் தோற்றது எனக் கூறினார். இதனால் பத்திரிக்கையாளர் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல கூச்சல் அதிகமானது.

அப்போது ஒரு நிரூபர் ‘ நீங்கள் ஏன் தோற்றீர்கள் ?’ எனக் கேட்க எரிச்சலான கிருஷணசாமி ‘நீ யாருப்பா... உனக்கு எந்த ஊரு? நீ என்ன சாதி? இவன் எப்ப பாத்தாலும் என்னை இப்படிதான் கேட்பான்’ எனப் பேசினார். இதனால் அங்கு கூச்சல் இன்னும் அதிகமானது. இந்த பேச்சு சர்ச்சைகளைக் கிளப்பியது. பல அரசியல் தலைவர்களும் கிருஷ்ணசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ’எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறுதான்.  எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதிதான். கிருஷ்ணசாமி வேறு அர்த்தத்தில் கேட்டிருந்தால் அது தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்