எப்பொழுது மரணம் வேண்டும் என ஆசைப்பட்ட ஜெயலலிதா: நிறைவேறியது ஆசை!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (09:49 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இறந்தார். இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நேற்று இறந்தார். இதன் மூலம் ஜெயலலிதாவின் ஒரு ஆசை நிறைவேறியுள்ளது.


 
 
சோ ராமசாமி இறப்பதற்கு முன்னர் தான் இறக்க வேண்டும் என ஜெயலலிதா விருப்பப்பட்டதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதே போல அவரது நெருங்கிய நண்பர் சோ ராமசாமி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாள் அதாவது 7-ஆம் தேதி இறந்தார்.
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சோ ராமசாமிக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பை பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பகிர்ந்து கொண்டார்.
 
அதில், ஒருமுறை சோவுடன் பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதா, நீங்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். எனக்கு ஒரு ஆசை, உங்களுக்கு முன்னால் நான் இறக்க வேண்டும். நீங்கள் முன்னதாக இறந்துவிட்டால் எனக்கு பாதுகாப்பு இருக்காது என ஜெயலலிதா சோவிடம் கூறியதாக முருகன் தெரிவித்துள்ளார். அன்று சொன்னார் இன்று நடந்து விட்டது அவரது ஆசை. மரணத்திலும் பிரியவில்லை இவர்களது நட்பு.

 
அடுத்த கட்டுரையில்