முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் செல்ல ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:08 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் சற்று நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் அழைத்து செல்லப்படுவார் என தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா வழக்கமாக செல்லும் கான்வாய் என கூறப்படும் முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம் இதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவி உடன் கூடிய உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனையடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் முதல் அப்பல்லோ மருத்துவமனை வரை 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் வெளியாகும் எனவும், அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறித்து முக்கியமான தகவல் வெளியாகி அவர் போயஸ் கார்டன் அழைத்து செல்லப்படுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்