ஜெயலலிதா சிகிச்சைக்கு அப்பல்லோவில் சின்ன மாற்றம்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (14:55 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா 40 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். முதலில் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் மெடிக்கல் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டான எம்டிசிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று இரவு இரண்டாவது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.
 
இந்த தளத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த லேபர் வார்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் காலியாக உள்ள இந்த தளத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இன்று இரவு முதல்வர் ஜெயலலிதா இந்த சிறப்பு வார்டில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்